Banner Image

சிங்கப்பூரின் பொருளாதார முன்னேற்றம்

புதிய திறன்களை விரைவாகக் கற்றுக்கொள்ளும் சிங்கப்பூர் மக்களின் ஆற்றலும் புதிய சூழலுக்குத் தங்களை மாற்றியமைத்துக்கொள்வதற்கான விருப்பமும்தான் தொழிலதிபர்கள் தங்களின் செயல் நடவடிக்கைகளுக்கான தளமாகச் சிங்கப்பூரைப் பயன்படுத்தும் முடிவை எடுக்கப் பெருமளவில் உதவியுள்ளன.
டாக்டர் டோ சின் சாய், 1969 டிசம்பர் 4

நாங்கள் எதை நாடுகிறோம்

புதிய பொருளாதார வாய்ப்புகளைத் தொடர்வதற்காக மாற்றியமைத்துக்கொள்ளல், சவால்களை எதிர்கொள்வதில் மீள்திறன் நமது துணிவு, புதியனவற்றை முயன்று பார்க்கத் தயாராக இருத்தல் ஆகியவற்றை எடுத்துக்காட்டிய, சிங்கப்பூர் தொழில்மயமாக்கப்பட்ட தொடக்ககாலத்தின் பொருட்களையும் கதைகளையும் நாங்கள் நாடுகிறோம்.

மேலும் தொடர்புடைய மைல்கல்களும் அரும்பொருள் எடுத்துக்காட்டுகளும்:

  • ஜூரோங், தங்ளின் ஹால்ட், ஜாலான் அம்பாட் ஆகிய இடங்களில் உள்ள தொழிலியல் பேட்டைகளில் தங்களின் செயல் நடவடிக்கைகளை அமைத்துக்கொண்ட உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள்
  • சிங்கப்பூரில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள்
Card

1966இல், தங்ளின் ஹால்ட்டில் அமைந்திருந்த செட்ரான் தொழிற்சாலை ஊழியர் ஒருவர்

தகவல், கலை அமைச்சின் சேகரிப்பு. சிங்கப்பூர் தேசிய ஆவணக் காப்பகம் ஆதரவுடன்.

Card

ஜூரோங் கப்பல்பட்டறை வேலை அனுமதிச் சீட்டு

நன்றி: சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகம், தேசிய மரபுடைமைக் கழகச் சேகரிப்பு.

1960களிலும் 1970களிலும் தொழில்மயத்தையும் பொருளாதார வளர்ச்சியையும் அடைவதற்கான சிங்கப்பூரின் முயற்சியுடன், பல தொழிற்சாலைகள் வீடமைப்புப் பேட்டைகளின் அருகிலேயே அமைந்ததுடன் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மேலும் அதிக வேலை வாய்பபுகளும் கிடைத்தன.

சிங்கப்பூரில் அமைக்கப்பட்ட முதல் சில தொழிலியல் பேட்டைகளில் வேலை செய்திருக்கிறீர்களா, அங்கு வேலை செய்த காலம் தொடர்பான நினைவுப் பொருட்கள் உங்களிடம் உள்ளனவா? உங்களின் பொருட்கள் மற்றும் கதைகள் மூலம் சிங்கப்பூரின் பொருளாதார உருமாற்றத்தில் ஒரு பகுதியாக இருந்ததில் உங்களின் உணர்வு எவ்வாறு இருந்தது என்பதைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Card

60களின் இறுதியிலிருந்து 70களின் தொடக்கம் வரை சிங்கப்பூரில் உற்பத்தி செய்யப்பட்ட செட்ரான் வானொலிப் பெட்டி.

நன்றி: சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகம், தேசிய மரபுடைமைக் கழகச் சேகரிப்பு.

Card

1964இல் செட்ரான் (சிங்கப்பூர் எலக்ட்ரானிக்ஸ்) லிமிடெட் நிறுவனம் தயாரித்த கறுப்பு-வெள்ளை தொலைக்காட்சிப் பெட்டி.

நன்றி: சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகம், தேசிய மரபுடைமைக் கழகச் சேகரிப்பு.

Card

ரோலாய் 35 LED காமிரா

திரு சொங் நாம் சொய் ஆதரவுடன்.

சிங்கப்பூரில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் பரவலாக அறியப்பட்டதுடன் வேலை வாய்ப்புக்கள் இங்கு நாம் பார்க்கும் செட்ரான் டிவி போன்ற “சொகுசுப் பொருட்களை” சொந்தமாக்கிக்கொள்ள அதிகமானோருக்கு வாய்ப்பளித்தன.

1960களில் அல்லது 1970களில் சிங்கப்பூரில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களில் ஒன்று உங்களுக்குச் சொந்தமாக உள்ளதா?

Card

ஷெல் நிறுவனம் வெளியிட்ட புலாவ் புக்கோம் கையேடு, முதல் முன்னோடிச் சான்றிதழைக் காட்டுவதோடு முதலீடு செய்ய சிங்கப்பூரை ஏன் தேர்ந்தெடுத்தனர் என்பதையும் விளக்குகிறது.

1960களிலிருந்து 1970கள் வரை, முதலீடு செய்யவும் தங்களின் தொழில்களை வளர்க்கவும் பன்னாட்டு நிறுவனங்கள் சிங்கப்பூரைத் தேர்ந்தெடுத்தன என்பதை விவரிக்கும் இத்தகைய பிரசுரங்களையும் உண்மைக் கதைகளையும் நாங்கள் நாடுகிறோம்.

திரு இயோ சூன் ஹோன் அன்பளிப்பு.
நன்றி: சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகம், தேசிய மரபுடைமைக் கழகச் சேகரிப்பு.

மேலும் தொடர்புடைய மைல்கல்களும் அரும்பொருள் எடுத்துக்காட்டுகளும்:

  • ஊழியர்கள் தங்கள் திறனை மேம்படுத்திக்கொள்ள உதவும் பயிற்சி வகுப்புகளை வழங்கிய நிறுவனங்களும் தொழில் மற்றும் தொழில்நுட்பப் பள்ளிகளும்
  • செயல்திறனை அதிகரிக்க தேசிய உற்பத்தித்திறன் இயக்கங்களின் தொடக்கம்
  • பிரிட்டிஷ் இராணுவப் படை மீட்பின் தாக்கமும் செம்பாவாங் கப்பல்படைத் தளம் இராணுவப் பயன்பாட்டிலிருந்து வர்த்தகப் பயன்பாட்டிற்கு மாற்றப்படுதலும்

Card
Card

படம்: (வலது): திரு சொங் நாம் சொய்யின் ஆதரவுடன்
மேலங்கி (வலது): திரு சொங் நாம் சொயின் அன்பளிப்பு, சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகம், தேசிய மரபுடைமைக் கழகம் ஆகியவற்றின் ஆதரவுடன்

1970களில் ரோலாய் ஊழியர் அணிந்திருந்த கோட்(மேலங்கி). ரோலாய் தொழிற்சாலையில் காமிரா உற்பத்திசெய்யும் பிரிவில் மேற்பார்வையாளராகப் பணியாற்றிய திரு சொங் அதே மேலங்கியை அணிந்திருக்கிறார். சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழில்கல்லூரியில் உற்பத்திப் பொருளியல் படிப்பை முடித்த பின்னர், பல்வேறு ரோலாய் காமிராக்களுக்கான ஷட்டர்களைப் (shutters) பொருத்தும் கைவினைஞராகப் பயிற்சிபெற்றார். அப்பயிற்சியின் ஒரு பகுதியாக ஏழு மாதங்களுக்கு ஜெர்மனிக்கு அனுப்பப்பட்டார்.

Card

தேவைகளை நிறைவேற்றவும் போட்டித்தன்மையுடன் விளங்கவும் திறன்மேம்பாட்டையும் உற்பத்தித்திறனையும் வலியுறுத்தி அரசாங்கத்தால் இதைப் போன்ற மற்ற இயக்கங்களும் நடத்தப்பட்டன.

நன்றி: சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகம், தேசிய மரபுடைமைக் கழகச் சேகரிப்பு.

1960களிலிருந்து 1970கள் வரை நீங்கள் பங்கேற்ற பயிற்சித் திட்ட நடவடிக்கைகள் தொடர்பான கடிதங்கள், ஆவணங்கள் பொருட்கள் ஏதாவது உங்களிடம் உள்ளனவா? அல்லது 1975இல் நடத்தப்பட்ட முதல் தேசிய உற்பத்தித்திறன் இயக்கம் போன்ற உற்பத்தித்திறனை ஊக்குவிக்கும் முயற்சிகள் தொடர்பான பொருட்கள் உள்ளனவா? இந்த முயற்சிகளில் எந்த வகையில் நீங்கள் பங்கு பெற்றிருந்தீர்கள்?

Card

1975 சை 25இல் தசம்பாைாங் கப்பல் பட்டறையில் 400,000 டன் உலர் (தண்ணீர் இல்லா) பட்டறை அதிகாரபூர்ைைாகத் திைக்கப்பட்டறத நிறனவுகூரும் தபயர்ப்பலறக.

நன்றி: சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகம், தேசிய மரபுடைமைக் கழகச் சேகரிப்பு.

1967இல் பிரிட்டிஷ் இராணுவப் படை மீட்பு அறிவிக்கப்பட்டபோது, தனது பொருளாதாரத்தில் அமைப்புரீதியாக ஏற்பட்ட நிரந்தர மாற்றத்தையும் 40,000 வேலை இழப்புகளையும் சமாளிக்க சிங்கப்பூருக்குக் குறைந்த காலமே இருந்தது. 1967இல் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் திரு லீ குவான் இயூ, தாங்கள் வேலை செய்யும் முறைகளில் மக்கள் மாற்றம் செய்யவேண்டும் என்றும், சில வேளைகளில், “மாறுபட்ட விதத்தில் வாழ்க்கைக்குப் பணம் ஈட்ட வலி மிக்க மாற்றங்களையும் செய்யவேண்டும்” என்றார்.

இவை போன்ற அரும்பொருள்களும் கதைகளும் உங்களிடம் உள்ளனவா?

எங்கள் திரட்டில் உங்களுடையதையும் சேர்த்துக்கொள்ளப் பெரிதும் விரும்புகிறோம்.

பங்களியுங்கள்