Banner Image

நமது முதல் தலைமுறைத் தலைவர்களுடன் கலந்துரையாடல்கள்

நாங்கள் எதை நாடுகிறோம்

சிங்கப்பூரின் முதல் தலைமுறைத் தலைவர்களுடன் 1950கள் முதல் 1970கள் வரை கலந்துறவாடியிருக்கிறீர்களா?

அத்தகைய கலந்துறவாடல்கள் தொடர்பான உங்கள் புகைப்படங்களையும் நினைவுப் பொருட்களையும் நாங்கள் நாடுகிறோம். உங்கள் வேலையிடத்திற்கும் தொகுதிச் சுற்றுலாக்களுக்கும், சமுக நிகழ்ச்சிகளுக்கும் நமது முதல் தலைமுறைத் தலைவர்கள் வந்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், அவர்களின் கையொப்பமிடப்பட்ட நினைவுப் பொருட்கள், செங்கல் பதிக்கும் விழாக்களில் பயன்படுத்தப்பட்ட கைத்துண்டுகள், மரம் நடும் விழாக்களில் அவர்கள் பயன்படுத்திய மண்வெட்டிகள் முதலிய எந்தப் பொருளாகவும் அவை இருக்கலாம்.

Card

1974ஆம் ஆண்டில் மரம் நடும் தினத்தில் (அப்போதைய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சர்) டாக்டர் டோ சின் சாய்.

தகவல், கலை அமைச்சின் சேகரிப்பு. சிங்கப்பூர் தேசிய ஆவணக் காப்பகம் ஆதரவுடன்.

Card

1968இல், பார்க் ரோடு கட்டுமானத் தளத்திற்குச் சென்றபோது வீட்டு வரைபடத்தைப் பார்வையிடும் (அப்போதைய சட்ட, தேசிய வளர்ச்சி அமைச்சர்) திரு E.W. பார்க்கர்.

தி ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் © எஸ்பிஎச் மீடியா லிமிட்டெட் ஆதரவுடன். மறுபிரசுரத்திற்கு அனுமதி தேவைப்படும்

Card

திரு சுவா சியன் சின், (அப்போதைய சுகாதார அமைச்சர்) 1968இல் தூய்மைக்கேட்டிற்கு எதிரான செய்தியைத் தமது தொதியில் விளம்பரப்படுத்துகிறார்.

தி ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் © எஸ்பிஎச் மீடியா லிமிட்டெட் ஆதரவுடன். மறுபிரசுரத்திற்கு அனுமதி தேவைப்படும்.

Card

1964 ஜூலை 24ஆம் தேதி கேலாங் சிராய் இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களிடம் பேசும் திரு லீ குவான் இயூவும் (அப்போதைய சமூக விவகார அமைச்சரான) திரு ஒத்மான் வோக்கும்.

தகவல், கலை அமைச்சின் சேகரிப்பு. சிங்கப்பூர் தேசிய ஆவணக் காப்பகம் ஆதரவுடன்.

Card

டாக்டர் கோ கெங் சுவி (அப்போதைய நிதி அமைச்சர்) 1964 பிப்ரவரி 20இல் ஜூரோங் கப்பல் பட்டறை லிமிடெட் நிறுவனத்திற்கான அடிக்கல்லை நாட்டுகிறார்.

தி ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் © எஸ்பிஎச் மீடியா லிமிட்டெட் ஆதரவுடன். மறுபிரசுரத்திற்கு அனுமதி தேவைப்படும்.

Card

திரு டிமதி டி சூசா, சிங்கப்பூர்க் குடியரசு விமானப் படையின் முதல் தொகுதி விமானிகளில் ஒருவர். டாக்டர் கோ கெங் சுவீ உட்பட முதல் தலைமுறைத் தலைவர்கள் சிலருடன் கலந்துறவாடியதை அவர் நினைவுகூருகிறார்.

திரு டிமதி டி சூசா ஆதரவுடன்.

இவை போன்ற அரும்பொருள்களும் கதைகளும் உங்களிடம் உள்ளனவா?

எங்கள் திரட்டில் உங்களுடையதையும் சேர்த்துக்கொள்ளப் பெரிதும் விரும்புகிறோம்.

பங்களியுங்கள்