Banner Image

அத்தியாயம் 3

சிங்கப்பூர் எப்படிச் சிறந்து ​விளங்க முடியும் என்பதை நாம் உலகிற்குக் காட்டப்போகிறோம்

கோவின் மடமை

ஜூரோங்கில் உள்ள சதுப்பு நிலம் ஒன்றைத் தொழில் பேட்டையாக மாற்றுவதா? டாக்டர் கோ கெங் சுவியின் (அப்போதைய நிதி அமைச்சர்) திட்டம் மிகவும் சாத்தியமற்றதாகத் தோன்றியதால் “கோவின் மடமை” என்று அதற்குப் பெயரிடப்பட்டது. இருப்பினும், நமது முதல் தலைமுறைத் தலைவர்களும் மக்களும் ஒன்றாகச் செயல்பட்டு அதனைச் செய்ய முடியும் என்று மெய்ப்பித்தனர்.

1969ஆம் ஆண்டுக்குள், மாதக் கணக்கில் நடந்த அன்றாடத் தொழிற்சாலைத் திறப்பு விழாக்களுக்குப் பிறகு, ஜூரோங் தொழில் பேட்டை, 20,000 தொழிலாளர்களுக்கு மேற்பட்டோரைக் கொண்ட 181 தொழிற்சாலைகளின் இல்லமாயிற்று.

ஜூரோங் தொழில் பேட்டையாக வரக்கூடிய பகுதியை, இஞ்சே யூசோப் இஷாக் (அப்போதைய யாங் டி பெர்துவான் நெகாரா), திரு லீ குவான் இயூ, திரு ஹொன் சுவிய் சென் (அப்போதைய பொருளியல் வளர்ச்சிக்க கழகத் தலைவர்), திரு பெ செங் வாட் ( அப்போதைய அரசாங்கச் சேவை ஆணையத் தலைவர்) ஆகியோர் 1964இல் பார்வையிடுகின்றனர்.

ததகவல், கலை அமைச்சின் சேகரிப்பு. சிங்கப்பூர் தேசிய ஆவணக் காப்பகம் ஆதரவுடன்.

Card

தேசிய இரும்பு மற்றும் எஃகு ஆலை பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நீண்ட காலச் சேவை விருதுடன் திரு டான் கிம் சூ.

தேசிய இரும்பு, எஃகு ஆலையில் இயந்திரங்களைச் செப்பனிடுதல் ஆபத்தான வேலை. திரு டான் வேலை இடத்தில் பல விபத்துக்களை நேரில் பார்த்திருக்கிறார். தம் நுறரயீரறல பாதுகாக்க அவர் வேலை செய்யும்போது ஒரு ஈரத்துண்டின் வழி சுவாசித்தார். வேலை முடிந்ததும் அப்பர் பியர்ஸ் நீர்த்தேக்கப் பகுதியில் அடிக்கடி நடந்தார். அவரின் மகள்கள், அவருடைய நெஞ்சுரம், தன்னடக்கம், குடும்பத்தின் மீது அவர் காட்டிய அக்கறை ஆகியவற்றுக்காக இன்றளவும் அவரைப் போற்றி மதிக்கின்றனர்.

Mr Tan Kim Soo ஆதரவுடன்.

இவை போன்ற அரும்பொருள்களும் கதைகளும் உங்களிடம் உள்ளனவா?

எங்கள் திரட்டில் உங்களுடையதையும் சேர்த்துக்கொள்ளப் பெரிதும் விரும்புகிறோம்.