Banner Image

அத்தியாயம் 3

சிங்கப்பூர் எப்படிச் சிறந்து ​விளங்க முடியும் என்பதை நாம் உலகிற்குக் காட்டப்போகிறோம்

கப்பல்துறையின் எதிர்காலம்

அனைத்துலக வர்த்தகத்திற்கான கப்பல்களைப் பழுதுபார்த்தல், கட்டுதல், சாதனங்களைப் பொருத்துதல் ஆகியவற்றுக்கான பொறுப்பேற்ற சிங்கப்பூரின் முதலாவது வர்த்தகக் கப்பல்பட்டறை, ஜூரோங் கப்பல் பட்டறை.

ஜூரோங் கப்பல் பட்டறையை வணிகமயமாக்கியது சிங்கப்பூரின் கப்பல் தொழில் துறையின் வளர்ச்சிக்கு முக்கியமாக இருந்ததுடன் இளம் சிங்கப்பூர் எதிர் நோக்கிய பல பொருளாதார சவால்களைக் கடந்து வரவும் உதவியது.

Card

டாக்டர் கோ கெங் சுவி (அப்போதைய நிதி அமைச்சர்) 1964 பிப்ரவரி 20இல் ஜூரோங் கப்பல் பட்டறை லிமிடெட் நிறுவனத்திற்கான அடிக்கல்லை நாட்டுகிறார்.

தகவல், கலை அமைச்சின் சேகரிப்பு. சிங்கப்பூர் தேசிய ஆவணக் காப்பகம் ஆதரவுடன்.

Card

ஜூரோங் கப்பல் பட்டறை லிமிடெட் நிறுவனம் கட்டிய அங்கெரெக் (Anggerek) எனும் இழுபடகின் தொடக்கவிழா.


தகவல், கலை அமைச்சின் சேகரிப்பு. சிங்கப்பூர் தேசிய ஆவணக் காப்பகம் ஆதரவுடன்.

புதிய திறன்களை விரைவாகக் கற்றுக்கொள்ளும் சிங்கப்பூர் மக்களின் ஆற்றலும் புதிய சூழலுக்குத் தங்களை மாற்றியமைத்துக்கொள்வதற்கான விருப்பமும்தான் தொழிலதிபர்கள் தங்களின் செயல் நடவடிக்கைகளுக்கான தளமாகச் சிங்கப்பூரைப் பயன்படுத்தும் முடிவை எடுக்கப் பெருமளவில் உதவியுள்ளன.
டாக்டர் டோ சின் சாய், 1969 டிசம்பர் 4
Card

ஜூசராங் கப்பல் பட்டறை லிைிதடட் நிறுைனத்தின் சைறல அனுைதிச் சீட்டு.

கப்பல் கட்டுதலுக்கும் பழுதுபார்த்தலுக்கும் அப்சபாது இருந்த கிட்டத்தட்ட எல்லாப் தபாைியியல் துடறகடளயும் மற்ற திைன்கறளயும் ஈடுபடுத்தும் சதறை இருந்தது.

இந்த 1964ஆம் ஆண்டு சைறல அனுைதிச் சீட்டு, 1960களில் எத்தறகய சைறலகள் கிறடத்தன என்பறதயும் அத்தறகய சைறலகறளப் தபை சிங்கப்பூரர்களுக்கு எத்தறகய திைன்கள் சதறைப்பட்டன என்பறதயும் ததரிந்துதகாள்ள உதவுகின்ைது.

ெநன்றி: சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகம், தேசிய மரபுடைமைக் கழகச் சேகரிப்பு

இது னபான்ற அரும்பபாருடள ொங்கள்ொடுகினறாம்.எங்கள் விருப்பப் பட்டியடைப் பாருங்கள்.

புதிதாத சுதந்திரம் பெற்ற சிங்கப்பூர் சந்தித்த ஒரு பெரிய சவால், 1967இல் பிரிட்டிஷ் படை சிங்கப்பூரிலிருந்து மீட்டுக்கொள்ளப்படும் என்று அறிவித்த போது ஏற்படக்கூடிய 30,000 வேலை இழப்புகளும் பொருளாதாரத்தில் நிரந்தரமாக ஏற்பட்ட அமைப்பு ரீதியான மாற்றமும் ஆகும். .

பிரிட்டிஷ் படை மீட்டுக்கொள்ளப்பட்டதால், சிங்கப்பூர் மிக விரைவாக மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியதிருந்தது. அதற்கு ஆயத்தமாக இருக்க, சிங்கப்பூரர்கள் தங்கள் வேலை முறைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதுடன் சில வேளைகளில், “மாறுபட்ட வகையில் வாழ்க்கைக்குத் தேவையான வருமானத்தை ஈட்ட, வலி மிக்க மாற்றத்தைச் செய்யவேண்டும்” என்றார் திரு லீ குவான் இயூ.

இதற்கு ஒர் எடுத்துக்காட்டு, செம்பாவாங் கப்பல் படைத் தளம் இராணுவப் பயன்பாட்டிலிருந்து வர்த்தகப் பயன்பாட்டிற்கு மாற்றப்பட்டதாகும்.

Card

1975 மே 25இல் செம்பாவாங் கப்பல் பட்டறையில் 400,000 டன் உலர் (தண்ணீர் இல்லா) பட்டறை அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டதை நினைவுகூரும் பெயர்ப்பலகை .

சிங்கப்பூர் தேசிய ஆவணக் காப்பக அன்பளிப்பு, லின் ஜூன் லின்.
நன்றி: சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகம், தேசிய மரபுடைமைக் கழகச் சேகரிப்பு.

இவை போன்ற அரும்பொருள்களும் கதைகளும் உங்களிடம் உள்ளனவா?

எங்கள் திரட்டில் உங்களுடையதையும் சேர்த்துக்கொள்ளப் பெரிதும் விரும்புகிறோம்.